Saturday, December 11, 2010

பாரதீ! உன் நினைவாக...



கிழவனுடைய 
அறிவு முதிர்ச்சியும், நடுவயதிற்குள்ள மனத்திடனும், 
இளைஞனுடைய உற்சாகமும், குழந்தையின் இருதயமும்,
தேவர்களே - எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க!

நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள்த் தின்ன தகாதென்று
மிடிமையும் அச்சமு
ம் மேவியென் நெஞ்சில்
குடிமைபுகுந்தன, கொன்றவைபோக் கென்று

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்வது நிறைவு பெறும்வணம்

துன்ப மினில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது தீயது நாமறியோம்! அன்னைநல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!

தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசிவாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்துநரை
கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ!"

ண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ ?
மாயையே - மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ ! - மாயையே !
எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே - நீசித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ ? - மாயையே!

என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே ! - நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர் - மாயையே !

சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே ! - இந்தத்
தேகம் பொய் யென்றுணார் தீரரை யென்
செய்வாய் ! - மாயையே !

இருமை யழிந்தபின் எங்கிருப்பாய், அற்ப
மாயையே ! - தெளிந்
தொருமை கண்டார் முன்னம் ஓடாது
நிற்பையோ ? - மாயையே !
நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே - சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை - மாயையே !

என்னிச்சை கொண்டுனை யெற்றி விட
வல்லேன் மாயையே ! - இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண் - மாயையே !
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே ! - உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை - மாயையே !


வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? – என்றும்
ஆரமுதுண்ணுதற் காசை கொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ
விண்ணிலரவிதனை விட்டுவிட் டெவரும் போய் மின்மினி கொள்வாரோ? 
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின் கைகட்டிப் பிழைப்பாரோ?  

மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பினை யிழப்பாரோ? 
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினாற் கைகொட்டிச் சிரியாரோ?  
வந்தே மாதரம் என்று வணங்கியபின் மாயத்தை வணங்குவாரோ? 
வந்தே மாதரம் ஒன்றே தாரகம் என்பதை மறப்பாரோ?

9 comments:

sathishsangkavi.blogspot.com said...

பாரதி பேரைச் சொன்னாலே மனதில் இனம் புரியாத ஒரு சந்தோசம்...

Anonymous said...

பகிர்வுக்கு நன்றி

ராகவன் said...

அன்பு தீபா,

எனக்கு ரொம்ப பிடித்த பாடல்... இது நாதநாமக்கிரியை ராகத்தில் கேட்க சுகமாய் இருக்கும்... பொன்னை உயர்வை புகழை விரும்பிடும் என்னை கவலைகள் தின்ன தகாதென்று... பாரதியின் பாடல் எனக்கு இசைமூலம் தான் முதலில் அறிமுகமானது... மனப்பாடப்பகுதி பாரதி அல்ல... இந்த தொகுப்பை படித்தவுடன்...முதலில் பாடிப் பார்த்தேன்... பாரதியை ஏன் ஒரு வாக்கேயக்காரர் என்று சொல்வதில்லை என்று தோன்றுகிறது எனக்கு.

வாரானோ வீதி வழின்னு... மாத்தி மாத்தி...ஒரே வரியை பரதத்தில் பிடித்து இழுத்துக் கொண்டிருப்பவர்களை துரித கதியில் மாத்த ஆரம்பித்த தமிழ்ப்பாடல் பாரதியிடம் தான் இருந்தது. பாரதியோட பாட்டை மட்டும் போட்டுட்டு... சும்மா இருப்பது தான் மிகப்பெரிய பதிவு...

அருமை தீபா...

அன்புடன்
ராகவன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

பகிர்வுக்கு நன்றி

pichaikaaran said...

மனதை உற்சாகப்படுத்திய பதிவு..

தகுந்த நேரத்தில் பகிர்ந்ததற்கு நன்றி

'பரிவை' சே.குமார் said...

பாரதிக்கு பகிர்வை தந்த உங்களுக்கு நன்றி.

Sriakila said...

'பாரதி' என்றப் பெயரில் யார் இருந்தாலும் அவர்களை என்னையுமறியாமல் பிடித்து விடுகிறது.

பாரதியாரின் கவிதைகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும். கர்நாடிக் கச்சேரிகளில் நான் ரசிப்பதும் கடைசியாக வரும் பாரதியாரின் பாடல்களைத்தான்.

படங்கள் ஒவ்வொன்றும் ரொம்பப் பொருத்தம். பாரதியாரின் பிறந்த நாளில் அவரைப் பற்றிய நினைவுகளைக் கொடுத்ததற்கு நன்றி தீபா!

Unknown said...

நன்றி

shaji said...

nice....