Tuesday, July 13, 2010

எனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்கள்

வீடு
சின்ன வயதில் டிவியில் தான் முதலில் பார்த்தேன். வீட்டில் அனைவரும் உட்கார்ந்து பார்க்கும் படமென்றால் அது நல்ல படம் என்று ஒரு கருத்து உண்டு. (அதாவது எனக்குப் புரியாது, அல்லது போரடிக்கும்!)
அதனால் அசுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் மிக எளிமையான வசனங்களும், அந்தத் தாத்தா மற்றும் அர்ச்சனாவின் தங்கையின் குறும்புகள், அர்ச்சனாவின் மிகையில்லாத நடிப்பும், மிக முக்கியமாக இளையராஜாவின் மனதை உருக்கும் பின்னணி இசை இவையெல்லாம், என்னை வெகு விரைவில் படத்தோடு ஒன்றச் செய்தன.

ஒரு வீடு கட்ட அந்த நடுத்தர வர்க்கத்துப் பெண் படும் பாட்டுக்கு இடையே வரும் சின்னச் சின்ன விஷயங்களும் நெகிழ்வாக மனதில் பதிந்தது. (பட்டுப் பாவாடை கேட்கும் தங்கையை முதலில் திட்டி விட்டுப் பின்பு வாங்கி வைத்திருப்பது, தாத்தாவுக்கும் பேத்திக்கும் இடையே இருக்கும் பாசம், அர்ச்சனாவின் காதலராக வருபவரின் பண்பைக் காட்டும் காட்சிகள், கடன் கேட்க்ப் போன தோழி (கூட வேலை பார்க்கும்) வீட்டில் கணவனின் அதிகாரம்+அலட்சியப் பேச்சு).

நாயகியை முன்னிறுத்தி, (அதுவும் மிகக் கண்ணியமான முறையில்) நான் பார்த்த முதல் படம் அது தான். இப்படிப் பல முதல்களைச் சொல்லலாம்.
ஆபாசம், குத்துப்பாட்டு, போரடிக்கும் சண்டைக்காட்சிகள் மருந்துக்கும் இல்லாதது வெகு ஆறுதலாக இருந்தது. இது மாதிரியே படங்கள் வந்தாலென்ன? என்று கூடத் தோன்றியது. இறுதியில் அந்த‌ அதிர்ச்சியூட்டும் முடிவுக்குப் பிற‌கு அப்ப‌டி அழுகை வ‌ந்த‌து. வீடு மனதில் இன்றும் பார‌மாக‌ நிற்கிற‌து.

http://www.youtube.com/watch?v=0lb96KF5r58&feature=related

http://www.youtube.com/watch?v=w7SyVmEj4oA&feature=related

புஷ்பக்‍
இந்தப் படம் எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று தெரியாது. அவ்வளவு பிடிக்கும். கவிதையைப் போன்ற படம் இது. கமலின் அற்புதமான நடிப்புக்கு அமலாவும் அழகாக ஈடு கொடுத்திருப்பார். நகைச்சுவைக் காட்சிகள் ஏராளம் இருந்தாலும் மனதை உருக்கும் முடிவுடன் இதன் தாக்கம் நெடுநேரம் மனதில் இருக்கும். வசனங்களே தேவைப் படாதவாறு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை இதன் சிறப்பம்சம். உலக அரங்கில் புகழ்ந்து பேசப்பட்ட இந்தியத் திரைப் படங்களுள் இதுவும் முக்கியமான ஒன்று.

http://www.youtube.com/watch?v=PheG5DHgnps

http://www.youtube.com/watch?v=B-20x0tf9CQ&feature=related

இன்னும் இருக்கு; இப்போதைக்கு இது போதும்!. காட்சிகள் பிடித்திருந்ததா?

14 comments:

சந்தனமுல்லை said...

எனக்கும் "வீடு" பார்த்த நினைவு ரொம்ப மங்கலா நினைவு இருக்கு. டிடிலே பிராந்திய மொழி திரைப்படங்களில் பார்த்ததா ஞாபகம்...

இரண்டாவது படம் இனிமேதான் பாக்கணும்..பகிர்வுக்கு நன்றி!

ஜீவன்பென்னி said...

என்றுமே மறக்க முடியாத படங்கள்.

ponraj said...

வீடு...
புஷ்பக்‍...
அருமை!!!
அடுத்து...!!
????
????
:-)

Riyas said...

"வீடு" பார்த்தது போல் ஞாபகம் ஆனால் மறந்துவிட்டேன்.. இதன் இயக்குனர் பாலுமகேந்திராவா..?

manasu said...

அது அற்புதமான இசை. "HOW TO NAME IT" என்ற இசைஞானியின் ஆல்பத்தை உபயோகித்திருப்பார் பாலுமகேந்திரா. தாத்தா இறந்தவுடன் அதை மிகைபடுத்தி காண்பிக்காது, சில நாள் கழித்து தாத்தாவின் பெட்டி திறக்கையில் அர்ச்சனா அழுவது இயல்பாய் இருக்கும். படம் முடிந்து "HOW TO NAME IT" வாங்கிவிட்டு தான் வீட்டுக்கே போனேன் அப்போது.

பேசும்படம் அதுவும் சிறந்தபடம்.

Dr.Rudhran said...

L Vaidyanathan composed music for the silent film.

ஆர்வா said...

வீடு தமிழில் ஒரு அற்புதமான திரைப்படம். அர்ச்சனாவிற்கு இந்தப்படம் தேசியவிருதை பெற்றுத்தந்தது. நல்ல ரசனை உங்களது....

அமுதா said...

அருமையான படங்கள். இரண்டு படங்களுமே டி.வியில் தான் பார்த்தேன்

அம்பிகா said...

இரண்டுமே சிறந்த படங்கள்.
நல்ல ரசனை+ தேர்வு.
வீடு பாத்து ரொம்ப நாளாச்சு.

இனியா said...

both are good movies...

balu's Veedu is too good.

nimmie said...

Both are very good movies. Veedu is not just about building a house. It is about a 'woman' building a house. Very moving film. Pushpak is of course a class of a different order.Must have seen it more than 10 times.

பனித்துளி சங்கர் said...

என்னையும் ரசிக்க வைத்தது உங்களின் ரசனை . இரண்டும் அருமை . பகிர்வுக்கு நன்றி

ஜெய்லானி said...

வீடு மறக்ககூடிய படமா அது..!!

'பரிவை' சே.குமார் said...

டிடிலே பிராந்திய மொழி திரைப்படங்களில் "வீடு" பார்த்த நினைவு இருக்கு.

என்னையும் ரசிக்க வைத்தது உங்களின் ரசனை . இரண்டும் அருமை . பகிர்வுக்கு நன்றி